தினம் ஒரு தகவல் : கடல் நீர் சுத்திகரிப்பு


தினம் ஒரு தகவல் : கடல் நீர் சுத்திகரிப்பு
x
தினத்தந்தி 17 Aug 2018 9:44 AM IST (Updated: 17 Aug 2018 9:44 AM IST)
t-max-icont-min-icon

கடல்நீர் சுத்திகரிப்பு என்பது கடலில் இருந்து நேரடியாக தண்ணீரை உறிஞ்சாமல் தீவுப் பகுதிகளிலும் கடற்கரை பகுதிகளிலும் கிணறுகள் அமைத்து அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சினால் நீரின் உப்புத் தன்மை குறையும்.

திட்ட செலவும் குறையும். ஆனால், கழிவுகளை அப்புறப்படுத்த பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

கடல் மட்டத்தில் இருந்து சூரியக் கதிர்கள் ஊடுருவும் 200 மீட்டர் ஆழம் வரையில் வசிக்கும் பெரிய உயிரினங்கள், முக்கிய மீன் வகைகள் எப்போதும் கடல் நீரோட்டத்துக்கு ஏற்ப நகர்ந்து கொண்டே இருக்கும். கடல் நீரை மேல் மட்டத்திலேயே உறிஞ்சுகின்றனர். கழிவையும் அவ்வாறே விடுகின்றனர். இதனால் மேற்பகுதியில் 200 மீட்டர் வரையிலான ஆழத்தில் வசிக்கும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

தவிர, மிக முக்கியமாக கடலின் நீரோட்டம் இதனால் பாதிக்கப்படுகிறது. பூமி ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சத்து ஏழாயிரத்து 300 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றுகிறது. அந்த வேகத்தை சீராக வைத்திருப்பவை கடலின் நீரோட்டங்களே. ஆனால், கடலில் நீரை அசுர வேகத்தில் உறிஞ்சுவதும் செலுத்துவதும் கடலின் நீரோட்டங்களை பாதிப்படைய வைத்துள்ளது. உப்புத் தன்மை அதிகமான கழிவை கடலில் கொட்டுவதால் உயிரினங்கள் முற்றிலும் அழியாது என்றாலும்கூட இடம் பெயர்ந்துவிடும். அதன் மரபணுவில் மாற்றங்கள் ஏற்பட்டு அதன் வளர்ச்சியும் குறைந்துவிடும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மீனின் உடல் அளவும், எடையும் இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது. சென்னை கடல் பகுதிக்கு நவம்பர் தொடங்கி ஏப்ரல் வரை மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, பெரு, நியூசிலாந்து, ஜப்பான், சீனா ஆகிய பகுதிகளில் இருந்து பங்குனி எனப்படும் ரெட்லி ஆமைகளும் பச்சை ஆமைகளும் இனப்பெருக்கத்துக்காக வரும். ஆனால், மேற்கண்ட பாதிப்புகளால் ஆமைகள் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. வந்த ஆமைகளும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றன.

முதலில் கடல் நீரை சுத்திகரிப்பது என்கிற கருத்துருவே தவறு. மழையை உள்வாங்கி ஆறுகளை உற்பத்தி செய்யும் சோலைக்காடுகளை சுற்றுலா என்னும் பெயரில் அழிக்கிறோம். அங்கிருந்து தரைப்பகுதிக்கு இறங்கி வரும் ஆற்றில் கழிவுகளையும் கொட்டி அழிக்கிறோம். கடலையும் விட்டு வைக்காமல் தீங்கு இழைக் கிறோம்.

தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக பொழியும் 900 மி.மீட்டர் மழையை முறையாக பாதுகாத்து, இருக்கும் நீர் நிலைகளைப் பராமரித்தாலே போதும். குடிநீர் தேவைக்காக வேறு எதையும் நாட வேண்டாம். மொத்தத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு என்பது வெற்றிகரமான, ஆரோக்கியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்தத் திட்டம் அல்ல என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து.


Next Story