வாஜ்பாய் மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம்
வாஜ்பாய் மறைவையொட்டி நெல்லை மாவட்டத்தில் அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
தென்காசி,
வாஜ்பாய் மறைவையொட்டி நெல்லை மாவட்டத்தில் அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
தென்காசி-ஆலங்குளம்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் தென்காசியில் நேற்று மாலையில் அனைத்து கட்சியினர் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. காந்தி சிலை முன்பு இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு பா.ஜ.க. நகர தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர்கள் சங்கர சுப்பிரமணியன், கருப்பசாமி, தி.மு.க. நகர செயலாளர் சாதிர், அ.தி.மு.க. நகர செயலாளர் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளத்தில் நடந்த ஊர்வலத்துக்கு நகர தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் மாடசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ், பொருளாளர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊத்துமலையில் ஆலங்குளம் ஒன்றிய தலைவர் அன்புராஜ் தலைமையில் வாஜ்பாய் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வெளியப்பதேவர், கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளை
திசையன்விளையில் அனைத்து கட்சி சார்பில் நடந்த மவுன ஊர்வலமானது காமராஜர் சிலை முன்பு தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் காமராஜர் சிலையை வந்தடைந்தது. இந்து முன்னணி மாநில பொது செயலாளர் அரசுராஜா, மாவட்ட துணைத்தலைவர் சாந்திராகவன், நகர தி.மு.க. செயலாளர் டிம்பர் செல்வராஜ், ச.ம.க. செயலாளர் சரவணன், காங்கிரஸ் பிரிவு செயலாளர் விவேக் முருகன், முருகேச ஆதித்தன், லிங்க பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவிலில் அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. பா.ஜ.க. சட்டமன்ற பொறுப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட பிரசார அணி செயலாளர் ராஜ்தேவேந்திரன், நகர தி.மு.க. செயலாளர் ராஜதுரை, புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் இன்பராஜ், ம.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகச்சாமி, நகர காங்கிரஸ் தலைவர் உமாசங்கர், இந்து முன்னணி ஆறுமுகச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்பையில் நடந்த ஊர்வலத்திற்கு நகர பா.ஜ.க. செயலர் அரிராம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவி மங்களசுந்தரி, சட்டமன்ற தொகுதி செயலர் ராமராஜ் பாண்டியன், பிரபாகரன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயபால், பெருந்தலைவர் மக்கள் கட்சி அச்சுதன் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டையில் நகர தலைவர் மாரியப்பன் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது.
பணகுடியில் நகர தலைவர் அய்யப்பன் தலைமையில் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி முக்கிய விதிகளின் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் பா.ஜ.க மாவட்ட துணை தலைவர் கலைசெல்வன், வக்கீல் சாந்த அய்யப்பன் உள்பட அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குற்றாலம்
குற்றாலம் நகர பா.ஜ.க. சார்பில் குற்றாலம் பஸ் நிலையம் அருகில் வாஜ்பாய் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பா.ஜ.க. நகர தலைவர் செந்தூர் பாண்டியன், துணை தலைவர் திருமுருகன், மேலகரம் ஈஸ்வரன், குற்றாலம் வர்த்தக சங்க தலைவர் காவையா, அ.தி.மு.க பாசறை சுரேஷ், தி.மு.க முன்னாள் நகர செயலாளர் ராஜாராம், பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் இசக்கி முத்து, காங்கிரஸ் தலைவர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாவூர்சத்திரத்தில் பா.ஜ.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. ஒன்றிய தலைவர் விஜயசேகர், மேற்கு மாவட்ட செயலாளர் அருள்செல்வன், இந்து முன்னனி மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் சாக்ரடீஸ், மாரியப்பன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், அ.ம.மு.க செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இட்டமொழி பஸ்நிலையத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் படத்துக்கு பாரதீய ஜனதா கட்சியினர், இந்து முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் இட்டமொழி புதூரில் வாஜ்பாய் படத்துக்கு பா.ஜ.க.வினர் மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story