ஆலங்குளம் அருகே குளக்கரையில் மண் அரிப்பு மூட்டைகளை அடுக்கி பொதுமக்கள் சீரமைத்தனர்
ஆலங்குளம் அருகே நாரணாபுரம் குளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனை அறிந்ததும் பொதுமக்கள் விரைந்து வந்து, மண் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே நாரணாபுரம் குளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனை அறிந்ததும் பொதுமக்கள் விரைந்து வந்து, மண் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர்.
சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு
தென்காசி பகுதிகளில் தொடர் மழை காரணமாக சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தென்காசி, சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் உள்ள ஏராளமான குளங்கள் பெருகி வருகின்றன. இதில் ஆலங்குளம் அருகே நாரணாபுரம் கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி உள்ளது.
இதில் குளக்கரையின் சில பகுதிகளில் கற்கள் பதிக்காமலும், சுவர்கள் கட்டப்படாததாலும் கரைகள் பலம் இழந்து உள்ளது. இந்தநிலையில் குளம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கரைப் பகுதியில் தண்ணீரின் அலை மோதி அரிப்பு ஏற்பட்டு மண் சரிந்தது.
மண் மூட்டைகளை அடுக்கினர்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாரணாபுரம் மற்றும் மாயமான்குறிச்சி ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் விரைந்து வந்தனர். அரிப்பு ஏற்பட்ட கரையில் மண் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் காற்றின் வேகத்தால் ஏற்படும் தண்ணீரின் அலைகள் மோதி கரையின் மேலும் சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story