கரூர் ஒன்றிய பகுதியில் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
கரூர் ஒன்றிய பகுதியில் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
கரூர்,
கரூர் ஒன்றியத்தில் காதப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர், பூர்ணிமா கார்டன், தரணி நகர், வெ.பசுபதிபாளையம் காலனி, வெ.பசுபதிபாளையம், நரிக்குறவர் காலனி, செம்மலர் நகர், அருகம்பாளையம், நேதாஜி நகர், தங்க நகர், காந்தி நகர், முத்துநகர், வெண்ணைமலைபட்டி, வெண்ணைமலை, சண்முகா நகர், கே.குப்புச்சிபாளையம், பெரிச்சிபாளையம், பெரிச்சிபாளையம் காலனி ஆகிய பகுதிகளில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களது அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஒப்படைக்கப்பட்ட வருவாய் இனங்கல் திட்டத்தின் கீழ் தரணி நகர் பகுதியில் ரூ.37 லட்சத்து 95 ஆயிரத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, அருகம்பாளையம் ஏ.டி.காலனி முதல் செம்மலர் நகர் வரை ரூ.10 லட்சத்து 86 ஆயிரத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நரிக் குறவர் காலனி பகுதியில் ரூ.7 லட்சத்து 45 ஆயிரத்தில் பேவர் பிளாக் பாதை அமைக்கும் பணி ஆகிய பணிகளுக்கு தம்பிதுரை, விஜயபாஸ்கர் ஆகியோர் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் பேசியதாவது:- மக்கள் இருப்பிடம் தேடி சென்று பொதுமக்களின் குறைகள், தேவைகளை மனுக்களாக பெற்று அந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர், மின்விளக்கு தொடர்பாக மனுக்கள் வரப்பெறுகின்றன. அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு முறையாக அனுப்பப்பட்டு விரைவில் தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நிறைவேற்றுவதற்காக வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வெள்ளிக்கிழமை தோறும் அம்மா திட்ட முகாம், மாதந்தோறும் மக்கள் தொடர்பு முகாம் என பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் இ-பொது சேவை மையங்கள், அம்மா அழைப்பு மையம், இணையதளம் வாயிலாக கோரிக்கை மனுக்கள் அளித்தல் போன்றவை நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் முறையாக பதிவு செய்யப்பட்டு உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய பதில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர்வடிகால்வாரிய செயற்பொறியாளர் (ஊரகம்) முத்துமாணிக்கம், மண்மங்கலம் வட்டாட்சியர் கற்பகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், செல்வி, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் காளியப்பன், கமலக்கண்ணன், திருவிக, கிருஷ்ணன், நெடுஞ்செழியன் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதையடுத்து தவுட்டுப்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் நேரில் சந்தித்து பாய், தலையணை, போர்வை மற்றும் உணவு பொருட்களை வழங்கினார். அப்போது அவருடன் மாவட்ட கலெக்டர் அன்பழகன், கரூர் மாவட்டத்திற்கு என நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story