புங்கத்தூர், மதுராந்தகத்தில் இன்று மின்தடை
திருவள்ளூர் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே இன்று திருவள்ளூர் ரெயில் நிலையம் முதல் எல்.ஐ.சி. வரை, பூங்காநகர், ஐ.ஆர்.என்.பின்புறம், புங்கத்தூர், சேலை, ஏகாட்டூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், ராஜாஜிபுரம், பெரியக்குப்பம், மணவாளநகர், ஒண்டிக்குப்பம், அதிகத்தூர், போளிவாக்கம், பாப்பரம்பாக்கம், கொப்பூர், ராமஞ்சேரி, பாண்டூர், பட்டரைபெரும்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும்.
மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story