வாஜ்பாய் மறைவுக்கு மந்திராலயாவில் இரங்கல் கூட்டம் மந்திரிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்

வாஜ்பாய் மறைவுக்கு மந்திராலயாவில் இரங்கல் கூட்டம் மந்திரிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 18 Aug 2018 5:00 AM IST (Updated: 18 Aug 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

வாஜ்பாய் மறைவை தொடர்ந்து மந்திராலயா வில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் மந்திரிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மும்பை, 

வாஜ்பாய் மறைவை தொடர்ந்து மந்திராலயா வில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் மந்திரிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இரங்கல் கூட்டம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று டெல்லியில் ஊர்வலமாக எடுத்து செல் லப்பட்டு தகனம் செய்யப் பட்டது. இறுதி சடங்கு நிகழ்ச்சியில் மராட்டிய அரசு சார்பில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் வாஜ்பாய் மறைவை தொடர்ந்து, மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயா வில் இரங்கல் கூட்டம் நடந்தது.

மந்திரிகள்

இந்த இரங்கல் கூட்டத்தில் மந்திரிகள் சுதிர் முங்கண்டி வார், திவாகர் ராவ்தே, தீபக் கேசர்கர் மற்றும் அரவிந்த் சாவந்த் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில போலீஸ் டி.ஜி.பி. தத்தா பட்சல்கிகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த துணை தூதர்களும் கலந்து கொண்டனர்.

இரங்கல் கூட்டத்தில் வாஜ்பாயின் சாதனைகள் நினைவுகூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story