கூடுவாஞ்சேரியில் பஸ் மோதி ஓட்டல் ஊழியர் பலி


கூடுவாஞ்சேரியில் பஸ் மோதி ஓட்டல் ஊழியர் பலி
x
தினத்தந்தி 18 Aug 2018 3:30 AM IST (Updated: 18 Aug 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரியில் பஸ் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.

வண்டலூர்,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூர் கிராமத்தில் உள்ள ஆர்.சி. நியூ தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 18), இவர் வண்டலூரில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை பிரசாந்த் மற்றும் அவருடன் பணிபுரியும் ஓட்டல் மேலாளர் ஆல்வா எடிசன் (வயது 32) இருவரும் வண்டலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கூடுவாஞ்சேரிக்கு சென்றனர்.

பின்னர் கூடுவாஞ்சேரியில் இருந்து மீண்டும் வண்டலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். கூடுவாஞ்சேரி மின்வாரியம் அருகே வரும்போது பின்னால் வந்த அரசு பஸ் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பிரசாந்த் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். ஆல்வா எடிசன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story