பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு 30 வீடுகளில் கொள்ளையடித்த கும்பல் கைது ரூ.9¾ லட்சம் பறிமுதல்

பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு 30 வீடுகளில் கொள்ளையடித்த கும்பல் கைது ரூ.9¾ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Aug 2018 4:00 AM IST (Updated: 18 Aug 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

30 வீடுகளில் கொள்ைளயடித்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 78 ஆயிரம், எலக்ட்ரானிக் பொரு ட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பை, 

30 வீடுகளில் கொள்ைளயடித்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 78 ஆயிரம், எலக்ட்ரானிக் பொரு ட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வீடுகளில் கொள்ளை

மும்ைப அந்தேரி, மரோல், எம்.ஐ.டி.சி, சாக்கிநாக்கா ஆகிய இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகளை குறி வைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் போலீசார் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி களை ஆராய்ந்தனர். அப் போது, 5 பேர் கொண்ட ஒரே கும்பல் தான் மேற்கண்ட இடங்களில் கைவரிசை காட்டியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கொள்ளையர்கள் 5 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஜோகேஸ்வரியில் பதுங்கி இருப்பதாக அந்தேரி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

5 பேர் கைது

இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஒரு வீட்டில் சோதனை போட்டனர். அப் போது, அங்கிருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 5 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் திருடி வைத்திருந்த ரூ.9 லட்சத்து 78 ஆயிரம் ரொக்கம், எலக்ட் ரானிக் பொருட்களை போலீ சார் கைப்பற்றினர்.

விசாரணையில் அவர்கள் இரவு நேரத்தில் கொள்ளை யடித்து வந்ததாகவும், மொத்தம் 30 வீடுகளில் கைவரிசை காட்டியிருந் ததாகவும் தெரிவித்தனர். போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story