‘யுனைடெட் டிரேட் பேர் இந்தியா’ நிறுவனம் சார்பில் விவசாய பொருட்கள் கண்காட்சி


‘யுனைடெட் டிரேட் பேர் இந்தியா’ நிறுவனம் சார்பில் விவசாய பொருட்கள் கண்காட்சி
x
தினத்தந்தி 18 Aug 2018 4:06 AM IST (Updated: 18 Aug 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

மதுரை தமுக்கம் மைதானத்தில் விவசாய பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.

மதுரை, 


மதுரை தமுக்கம் மைதானத்தில் “யுனைடெட் அக்ரி டெக் 2018“ விவசாய பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை மதுரை இயற்கை விவசாயி அழகு ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். கருப்பாயூரணி விவசாயி தர்மராஜ் குத்துவிளக்கு ஏற்றினார். 300-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் கூடிய கண்காட்சியில் தமிழகத்தின் சிறந்த நிறுவனங்கள், 10-க்கும் மேற்பட்ட வெளிமாநில நிறுவனங்கள் அதிநவீன விவசாய எந்திரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள், இயற்கை உரங்கள், இயற்கை விதைகள், விவசாயிகளுக்கு மானியம் மூலம் விவசாயம் செய்யவும், விவசாயம் குறித்த சந்தேகங்களுக்கும் சிறந்த நிபுணர்கள் மூலம் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

பொதுமக்களுக்கு தேவையான வீட்டு தோட்டம், மாடி தோட்டம் அமைக்க தேவைப்படும் உபகரணங்கள்,விதைகள், பூச்சி கொல்லி மருந்துகளுக்கான அரங்குகளும் இடம் பெற்றிருந்தன. அவர்களுக்கு புதிதாக அமைக்கவும் சந்தேக்கங்களை தீர்க்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. யுனைடெட் டிரேட் பேர் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் சார்பில் தொடங்கிய இந்த கண்காட்சி நாளை மறு நாள் (திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாட்டை யுனைடெட் டிரேட் பேர் நிறுவனத்தின் இயக்குனர்கள் மனோஜ்குமார், பாக்கியராஜ் ஆகியோர் செய்திருந்தனர். 

Next Story