தியாகிகளுக்கு நினைவு தூண் அமைக்க இடம் தேர்வு அமைச்சர் கமலக்கண்ணன் ஆய்வு
புதுச்சேரி மாநில சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நினைவு தூண் அமைக்க, அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில், காரைக்காலில் ஆய்வு செய்யப்பட்டது.
காரைக்கால்,
புதுச்சேரியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு காரைக்காலில் நினைவுத்தூண் அமைக்கவேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில், மாவட்ட கலெக்டர் கேசவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் நேற்று காரைக்காலில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
காரைக்கால் சந்தைத்திடலை ஒட்டி ஒரு இடமும், திருநள்ளாறு மெயின் சாலையையை ஒட்டி நூலாறு அருகில் ஒரு இடமும், காரைக்கால் புறவழிச்சாலை நெடுங்காடு சாலை அருகில் ஒரு இடமும், என 3 இடங்களில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.
இதில் சந்தைத்திடல் இடம் ஏற்கனவே மகாத்மா காந்தி சிலை வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டதால், அந்த இடத்தை தவிர்த்து, மற்ற 2 இடங்களில் தியாகிகள் நினைவுத்தூண் வைக்க அனுமதி கோரி முதல்-அமைச்சருக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது;-
புதுச்சேரி சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு காரைக்காலில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என்பதற்காக நேற்று 3 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 2 இடம் குறித்து முதல்-அமைச்சரின் ஆலோசனையை கேட்டுள்ளோம். இதில் ஏதாவது ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு தியாகிகள் நினைவுத்தூணை, பொதுமக்கள் உபயோகப்படுத்தும் பூங்கா வசதிகளோடு விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான திட்ட மதிப்பீட்டை தயார் செய்யும்படி மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story