மாமண்டூர் கிராமத்தில் கால்வாய் வசதி இல்லாததால் குளம்போல் தேங்கும் மழைநீர்
மாமண்டூர் கிராமத்தில் கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. மழைநீர் தேங்காமல் இருக்க அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்துத்தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனப்பாக்கம்,
இந்தநிலையில் சமீபத்தில் பெய்த மழையாலும், அப்பகுதியில் மழைநீர் வடிய கால்வாய் வசதி இல்லாததாலும் தெருக்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றவும், அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்துத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் முதியவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே மழை பெய்யும் போதெல்லாம் கிராம மக்களே முன்வந்து குளம்போல் தேங்கும் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து அம்பேத்கர்நகர் பகுதி மக்கள் கூறுகையில், சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைத்து, தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story