நெல்லை சந்திப்பில் டீசல் குடித்து தொழிலாளி தற்கொலை


நெல்லை சந்திப்பில் டீசல் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 19 Aug 2018 2:30 AM IST (Updated: 19 Aug 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பில் டீசல் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை, 

நெல்லை சந்திப்பில் டீசல் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள இறைப்புவாரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 45). இவர் நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள ஒரு பழைய மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று இவர் வழக்கம் போல் வேலைக்கு வந்திருந்தார். காலை 11 மணி அளவில் அங்கு வைக்கப்பட்டிருந்த டீசலை எடுத்து குடித்தார். இதைக்கண்ட சக தொழிலாளிகள் அவரிடம் இருந்து டீசல் கேனை பறித்தனர். ஆனால் சந்திரன் மயங்கி கீழே விழுந்தார்.

சாவு

இதையடுத்து சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

சந்திரன் குடும்ப பிரச்சினையால் டீசலை குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story