திருவண்ணாமலையில் நேபாள நாட்டை சேர்ந்தவருக்கு அடி- உதை
நேபாள நாட்டை சேர்ந்த சுமார் 40 வயது கொண்ட ஒருவர் சுற்றித்திரிந்தார். அவர் கற்களை எடுத்து பொதுமக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சேர்ந்து அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பே கோபுரம் அருகே நேற்று நேபாள நாட்டை சேர்ந்த சுமார் 40 வயது கொண்ட ஒருவர் சுற்றித்திரிந்தார். அவர் கற்களை எடுத்து பொதுமக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் நடந்து சென்ற பாதசாரிகளிடம் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சேர்ந்து அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டனர். பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி, அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Tags :
Next Story