கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு


கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 19 Aug 2018 3:00 AM IST (Updated: 19 Aug 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு போனது.

கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த வசுவ சமுத்திரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மேலாளராக வேலை செய்து வருபவர் மோகன்தாஸ் (வயது 54). கடந்த 16-ந் தேதி காலை பெட்ரோல் பங்க்கில் வசூல் செய்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தை ஒரு பையில் எடுத்து, மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து கொண்டு கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பில் உள்ள கனரா வங்கிக்கு சென்றார்.

வங்கியில் கூட்டமாக இருந்ததால் டீ குடித்து வர அருகில் உள்ள கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பணம் திருட்டு

திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து கல்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story