கரைபுரண்டு ஓடுகிறது வெள்ளம்: தண்ணீரில் தத்தளிக்கும் காவிரி கரையோர கிராமங்கள்
காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரம் உள்ள கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேவூர்,
கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. ஒகேனக்கல்லில் ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பரிசல் சவாரியும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் உள்ள கம்புருட்டு, புளியமரத்து கொம்பு ஆகிய கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
மேலும் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்ததால், ஒகேனக்கல், சத்திரம், இந்திரா நகர், ஊட்டமலை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கிருந்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பிலிகுண்டுலுவை அடுத்துள்ள ராசிமணல் திட்டில் மேய்ச்சலுக்காக சென்ற 50 மாடுகள் வெள்ளத்தில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மாடுகளை மீட்கும் பணிகளை தொடங்கினார்கள். இதனிடையே நேற்று முன்தினம் 17 மாடுகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அந்த பகுதியில் மேலும் இருந்த 33 மாடுகளை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட நிலையில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேட்டூர் பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் பாதாள சாக்கடை திட்டத்துக்காக கட்டப்பட்டிருந்த மோட்டார் அறை கட்டிடத்தையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கரையோரம் உள்ள தென்னந்தோப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் மேட்டூர் தூக்கனாம்பட்டி நகராட்சி பள்ளி பின்புறம் ஆற்றங்கரையோரம் இருந்த மரம் தண்ணீரின் வேகத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் சாய்ந்தது. மேலும் தங்கமாபுரிபட்டணம் அண்ணா நகரில் 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்தவர்கள் வெளியேற்றப் பட்டதுடன், பாதுகாப்பு கருதி அந்த வீடுகளில் இருந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி, கல்வடங்கம் மற்றும் காவேரிப்பட்டி, அக்ரஹாரம், மணக்காடு, மதிக்கிழான்திட்டு, தோப்புக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேவூர்- வட்ராம்பாளையம் செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.காவிரியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கரையோரம் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இந்த நிலையில் நேற்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, காவேரிப்பட்டி, அக்ரஹாரம், மதிக்கிழான்திட்டு, மணக்காடு, தோப்புக்காடு உள்ளிட்ட இடங்களில் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ளவர்களை பரிசல்கள் மூலம் மீட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.
காவிரி கரையோர விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கரும்பு, மஞ்சள், பருத்தி, வெண்டைக்காய் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதையும், காவேரிப்பட்டி பரிசல் துறை பகுதியில் வெள்ளப்பெருக்கால் சூழ்ந்த ராகு கேது கோவில், பஞ்சமுக விநாயகர் கோவில், கம்பத்தையன் கோவில்களையும் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து கலெக்டர் ரோகிணி எடப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆற்றுப்பகுதியையும், மேட்டூர் பகுதிக்கும் சென்று ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தண்ணீர் வடிந்த பின்னரே சேத மதிப்பு தெரியவரும். அதன் பின்னர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தண்ணீர் வரத்து அதிகமானதால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் தயார் நிலையில் உள்ளனர். மேட்டூர் அணை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. அணை 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளது. எனவே யாரும் அச்சப்பட வேண்டாம். மேலும் காவிரி கரையோர மக்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும், குமாரபாளையம் பகுதியில் காவிரி கரையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் வசித்து வந்த 668 குடும்பங்களை சேர்ந்த 2,088 பேர் அரசு சார்பில் ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ள 16 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாகவே இருப்பதால் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் நீரில் மூழ்கிய வீடுகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. வீடுகளை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதேபோல பள்ளிபாளையத்தில் உள்ள பெருமாள் மற்றும் முருகன் கோவில்களையும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குமாரபாளையத்தில் பழைய பள்ளிபாளையம் ரோடு, பழைய பாலம், நகராட்சி அருகில் கிராம சாவடி, சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர் ஆகிய 5 இடங்களில் தொடர்ந்து அதிகளவு தண்ணீர் வருவதால் அந்த பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து அந்த பகுதிகளில் கண்காணித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story