டி.வி.டி.பிளேயரை திருடி விட்டு மினிபஸ்சிலேயே தூங்கிய போதை ஆசாமிகள்
ஆட்டையாம்பட்டி அருகே டி.வி.டி.பிளேயரை திருடி விட்டு மினிபஸ்சிலேயே போதை ஆசாமிகள் தூங்கினர்.
ஆட்டையாம்பட்டி,
பின்னர் காலையில் எழுந்து தப்பி ஓடிய போது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அப்போது டிரைவர், மினிபஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த டி.வி.டி.பிளேயரை காணாததை கண்டு அவர்கள் 2 பேரும் திருடி கொண்டு செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், பின்னாலேயே திருடன், திருடன் என்று சத்தம் போட்டு கொண்டே அவர்களை விரட்டினார். சத்தம் கேட்டு பொதுமக்களும் அவர்களை விரட்டினர்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சிறிது தூரம் சென்றவுடன் தட்டுத்தடுமாறி கீழே விழுந்தனர். உடனே பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்து ஆட்டையாம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், பிடிபட்ட 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் சேலம் ரெட்டியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன்(வயது 29), சேலம் மெய்யனூர் அர்த்தனாரிகவுண்டர் தெருவை சேர்ந்த அன்சர்பாட்ஷா(28) என்றும், இவர்கள் இருவரும் மினிபஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த டி.வி.டி. பிளேயரை திருடி கொண்டு மது போதையில் இருந்ததால் மினிபஸ்சிலேயே தூங்கி விட்டதாகவும், தப்பி ஓடிய போது பொதுமக்கள் பிடித்து விட்டதாகவும் தெரிவித்தனர். அது மட்டுமின்றி 2 பேரும் சென்ற மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது. பின்னர் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருடிய மொபட் ஒன்றும் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story