புகார் கொடுக்க சென்றபோது போலீசார் பேனா வாங்கி தருமாறு கட்டாயப்படுத்தினர் என்ஜினீயர் போலீஸ் கமிஷனரிடம் புகார்


புகார் கொடுக்க சென்றபோது போலீசார் பேனா வாங்கி தருமாறு கட்டாயப்படுத்தினர் என்ஜினீயர் போலீஸ் கமிஷனரிடம் புகார்
x
தினத்தந்தி 19 Aug 2018 4:25 AM IST (Updated: 19 Aug 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

புகார் கொடுக்க சென்றபோது போலீசார் பேனா வாங்கி தருமாறு கட்டாயப்படுத்தியதாக என்ஜினீயர் ஒருவர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து உள்ளார்.

மும்பை, 

புகார் கொடுக்க சென்றபோது போலீசார் பேனா வாங்கி தருமாறு கட்டாயப்படுத்தியதாக என்ஜினீயர் ஒருவர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து உள்ளார்.

பேனா கேட்டு கட்டாயப்படுத்தினர்

மும்பையை சேர்ந்த சிவில் என்ஜினீயர் தன்வீர் சித்திக் (வயது24). இவர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த வியாழக்கிழமை தன்னுடைய மணிபர்ஸ் காணாமல் போய் விட்டது. இதுகுறித்து புகார் அளிக்க இரவு 10.30 மணியளவில் நான் மேக்வாடி போலீஸ் நிலையத்திற்கு சென்றேன். அப்போது அங்கு இருந்த போலீஸ்காரர்கள் 2 பேனா (மார்க்கர்) வாங்கி தந்தால் தான் புகாரை பதிவு செய்வோம் என கூறினர். நான் தன்னிடம் பணம் ஏதும் இல்லை எனவும், புகாரை பதிவு செய்த பிறகு பேனா வாங்கி தருவதாக போலீசாரிடம் கூறினேன்.

செல்போன் பறிப்பு

ஆனல் அவர்கள் பேனா வாங்கி தரும்படி கட்டாயப்படுத்தினர். இந்தநிலையில் சுமார் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் போலீசார் என்னை தனியறைக்கு அழந்து சென்றனர். அப்போது போலீஸ் நிலையத்தில் நடந்ததை நான் படம் பிடித்ததாக தனது செல்போனை பிடுங்க முயற்சித்தனர். கொடுக்க மறுத்ததால் என்னை தாக்கி செல்போனை பறித்தனர்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.

இந்த புகார் குறித்து மேக்வாடி சீனியர் இன்ஸ்பெக்டர் கூறுகையில் ‘என்ஜினீயரிடம் நாங்கள் பேனா எதுவும் கேட்கவில்லை. போலீஸ் நிலையத்தில் படம் எடுத்ததற்காக மட்டுமே அவரை எச்சரித்தோம்’ என்றார்.

Next Story