வேடசந்தூர் அருகே 39 பயனாளிகளுக்கு கறவைமாடுகள் - பரமசிவம் எம்.எல்.ஏ. வழங்கினார்


வேடசந்தூர் அருகே 39 பயனாளிகளுக்கு கறவைமாடுகள் - பரமசிவம் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 19 Aug 2018 5:04 AM IST (Updated: 19 Aug 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே 39 பயனாளிகளுக்கு கறவைமாடுகளை பரமசிவம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகேயுள்ள பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், உறுப்பினர்களுக்கு கறவைமாடுகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் நிலா தண்டபாணி, கூட்டுறவு சங்க தலைவர் கந்தவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கூட்டுறவு சங்க செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார். விழாவில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் பங்கேற்று, ரூ.17½ லட்சம் மதிப்பில் 39 பயனாளிகளுக்கு கறவைமாடுகளை வழங்கினார். நிலவள வங்கி துணைத்தலைவர் நடராஜ், எம்.ஜி.ஆர். மன்ற நகர துணைத்தலைவர் பாபுசேட் மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story