வெம்பக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


வெம்பக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Aug 2018 5:11 AM IST (Updated: 19 Aug 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதால் உரிமம் எடுத்து பட்டாசு தயாரிப்போருக்கு விற்பனை பாதிக்கப்படுகிறது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை பகுதியில் 250–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் முறையாக உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. தற்போது தீபாவளிக்காக தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சட்ட விரோதமாகவும், எந்தவிதமாக பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் சில இடங்களில் குடிசைத்தொழில் போல பட்டாசு தயாரிக்கப்படுகிறது. அதனை உரிமம் பெற்று விற்கப்படும் பட்டாசுகளை விட மலிவான விலையில் விற்கின்றனர். இதனால் பட்டாசு ஆலை அதிபர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அனுமதியின்றி பட்டாசு தயாரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு தொழிலை சீரழிக்கும் இந்த செயலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் வெற்றிலையூரணியில் வீடுகளில் பட்டாசு தயாரித்த முத்துராஜ் (வயது32), செல்லத்துரை (45) ஆகியோரையும், விஜயகரிசல்குளத்தில் செல்வம் (29) என்பவரையும் வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். மூவரிடம் இருந்தும் தலா 10 கிலோ சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Next Story