ஓட்டேரியில் வெள்ளை நிற ஆந்தை பிடிபட்டது
சென்னை ஓட்டேரி டோபிகானா தெருவில் வெள்ளை நிற ஆந்தை பிடிபட்டது.
திரு.வி.க.நகர்,
சென்னை ஓட்டேரி டோபிகானா தெருவில் வெள்ளை நிற ஆந்தை ஒன்றை அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் பிடித்து வைத்து உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக ஓட்டேரி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று வெள்ளை நிற ஆந்தையை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் அந்த ஆந்தையை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “பிடிபட்ட ஆந்தைக்கு 3 வயது இருக்கும். லட்சத்தில் 4 முதல் 6 ஆந்தைகள் இதுபோன்று வெள்ளை நிறத்தில் இருக்கும். இரையை தேடி இரவில் ஓட்டேரி பகுதிக்கு வந்தபோது, விடிந்து விட்டதால் கண் தெரியாமல் பறக்க முடியாமல் இருந்து இருக்கலாம். அதை சிறுவர்கள் பிடித்து வைத்ததால் அதற்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. அதை குணப்படுத்திய பிறகு வனப்பகுதியில் அந்த ஆந்தையை சுதந்திரமாக பறக்க விடப்படும்” என்றனர்.
Related Tags :
Next Story