வைகை கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
வைகை கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
திருமங்கலம்,
வைகை அணை நீர்மட்டம் தற்போது 67 அடியை எட்டி உள்ளது. முதல்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அடுத்து 68 அடியை எட்டும்போது 2–வது வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படும். 69 அடியை எட்டியவுடன் 3–ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டவுடன் தண்ணீர் திறக்கப்படும்.
இதன் மூலம் வைகை தண்ணீர் பாயும் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மவாட்டங்களில் முதல்போக நெல் சாகுபடி செய்ய முடியும். வைகை கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. நீச்சல் அடித்தல், குளிப்பது உள்ளிட்ட செயலில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம். இதற்காக மக்கள் அச்சப்படத்தேவையில்லை. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள சேதம் மற்றும் பேரிடர் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மதுரை மவாட்ட கலெக்டர் வீரராகவராவ் கூறியதவாது, மக்களுக்கு ஏதாவது அசாம்பாவிதம் ஏற்ப்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இலவச தொலைபேசி எண், 10 அரசுத்துறை அதிகாரிகள் அடங்கிய மீட்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை 38 இடங்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நீச்சல் பயிற்சி பெற்ற ஆண்கள், பெண்கள் அடங்கிய குழு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.