இருவித இசையும்.. இணையற்ற புகழும்..
சமூக ஊடகத்தில் உலகப் புகழ்பெற்ற பாடகி, வித்யா வோக்ஸ் என்ற வித்யா. தமிழ்ப் பெண்ணான இவர், இந்தியப் பாடல்களை மேற்கத்திய இசையில் பாடுவதில் புகழ் பெற்றிருக்கிறார்.
வித்யா உலகெங்கும் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டிருக்கிறார்.
வித்யா சென்னையில் பிறந்தவர். ஆனால் வளர்ந்தது, படித்தது எல்லாம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில். உளவியல் பட்டதாரியான இவர், சிறுவயது முதலே பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். ஆனாலும் பள்ளி நாட்களில் அதை வெளிக்காட்டிக் கொண்டதில்லை என்கிறார்.
‘‘பள்ளிக் காலத்தில் எனக்குப் பிடித்த பாடம் அறிவியல். இப்போதும் எனக்குப் பிடித்தது அதுதான். சிறுவயதிலேயே நான் நன்கு பாடவும் செய்வேன். ஆனால் கல்லூரியை எட்டுவதற்கு முன்பு, நான் எனது பாடும் திறமையை வெளிக்காட்டிக் கொண்ட தில்லை. கல்லூரிக் காலத்தில் கிளாரினட் இசைக் கலைஞரும் இசையமைப்பாளருமான ஷங்கர் டக்கரை சந்திக்கும் வரை நான் யூ-டியூப்பின் சக்தியை உணரவில்லை. ஷங்கருடன் இணைந்துகொண்ட நான், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளியே அவருடன் பயணித்து, அவரது இசைக்குழுவில் பாட ஆரம்பித்தேன். பாடும்போது கிடைத்த சந்தோஷம் எனக்குப் பிடித்திருந்தது. எனவே நான் இசையில் தீவிரமாக ஈடுபட விரும்பினேன்.
அப்போது என் அம்மா எனக்கு இரண்டாண்டு கால அவகாசம் கொடுத்தார். அந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நான் இசையில் எதுவும் சாதிக்காவிட்டால், மீண்டும் படிப்புக்குத் திரும்பி விட வேண்டும் என்று அவர் நிபந்தனை போட்டார்’’ என் கிறார்.
ஆக, வித்யா தனது விருப்பப்படி, இந்துஸ்தானி கற்க இரண்டு வருடங்கள் மும்பை வந்து தங்கினார், கற்றுக்கொண்டார். மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பிய அவர், தனது முதல் பாடல் வீடியோவை யூ-டியூப்பில் வெளியிட்டார். அன்று முதல் இவருக்கு புகழ் மழைதான்.
வித்யா அமெரிக்காவில் வாழ்ந்தாலும், தன்னை அசல் தமிழ்ப்பெண் என்கிறார்.
‘‘நான் அமெரிக்காவிலும் இட்லி, தோசை சாப்பிட்டுத்தான் வளர்ந்தேன். வீட்டில் தமிழில்தான் பேச வேண்டும் என்பதில் அம்மா கண்டிப்பாக இருப்பார்’’ என்று சொல்லும் வித்யா தொடர்ந்து, ‘‘நான் ஏதோ இரண்டு உலகத்தில் வாழ்வதைப் போல இருக்கும். எங்கள் பள்ளி பஸ்சிலேயே மேற்கத்திய இசை ஒலித்துக்கொண்டிருக்கும். எனது சக மாணவிகள் எல்லாம் மதிய உணவாக சாண்ட்விச் சாப்பிடும்போது, நான் இட்லி-சாம்பாரை எடுத்துச் சென்றிருப்பேன். அதுகுறித்து எனது பிற அமெரிக்க மாணவிகள் கிண்டல் செய்வார்கள். அதனால், எல்லாக் குழந்தைகளையும் போல எனக்கும் ஏன் `வழக்கமான' மதிய உணவைக் கொடுத்துவிடவில்லை என்று வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சண்டை போடுவேன்’’ என்று பழைய நினைவுகளில் மூழ்குகிறார்.
‘‘பள்ளியில் நான் எதிர்கொள்ளும் கிண்டலுக்கு அளவே இருக்காது. உன் மேல் இந்திய கறி வாசனை வீசுது. நீ ஏன் வினோதமான லஞ்ச் எடுத்துட்டு வர்றே என்று சக மாணவிகள் சீண்டிக்கொண்டே இருப்பார்கள்’’ என்று சொல்லும் வித்யாவுக்கு பெற்றோர் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும் விதித்திருக்கிறார்கள். அதாவது டேட்டிங் செல்லக்கூடாது, வீடியோ கேம் விளையாடக் கூடாது, அதிக நேரம் டி.வி. பார்க்கக்கூடாது என்று தனக்கான கட்டுப்பாடுகள் நீளமானவை என்கிறார் வித்யா.
அதேநேரம், தன்னைப் போல அமெரிக்காவில் வளர்ந்த இந்தியக் குழந்தைகள் அனைவரும் இந்த விஷயங்களை எதிர்கொண்டிருப்பார்கள் என்றும், ஓர் இந்தியராக தான் பெருமைப்படுவதாகவும் கூறுகிறார்.
பள்ளி நாட்களில் தனது இந்திய அடையாளத்தை வெளிப்படுத்தப் பயந்தாலும், கல்லூரிக் காலத்தில் முழுமையாக இந்தியத்தன்மையில் மூழ்கிவிட்டதாகச் சொல்கிறார் வித்யா.
‘‘நான் பாங்ரா நடன நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்க ஆரம்பித்தேன். ஆனாலும்கூட எனக்கு பாடத் தெரியும் என்பதை யாரிடமும் கூறவில்லை. எனது சகோதரியும் கல்லூரியில் வந்து சேர்ந்தபோது, எங்களுக்கு பாடத் தெரியும் என்று கல்லூரி முழுக்க தம்பட்டம் போட்டு விட்டாள். அதற்கப்புறம் கல்லூரி நிகழ்ச்சிகளில் எல்லாம் அமெரிக்க தேசிய கீதத்தை நாங்கள்தான் பாடினோம்’’ என்கிறார்.
இந்திய இசையையும், மேற்கத்திய இசையையும் கலந்துகொடுப்பது ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று வித்யா எப்படி முடிவு செய்தார்?
‘‘நான் மேற்கத்திய பாடகர் களின் பாடல்களைக் கேட்ட அதேநேரம், நித்யஸ்ரீயின் பாடல்களையும் கேட்டுத்தான் வளர்ந்தேன். எனக்கு முன்பே பலர் மேற்கத்திய இசையையும் இந்திய இசையையும் கலந்து கச்சேரி செய்துகொண்டிருந்தனர். அப்போதுதான், நாமும் ஏன் இப்படி பாடக் கூடாது, ஒரே பாடலை இருவித பாணியிலும் பாடலாமே என்று யோசித்தேன். ஆரம்பத்தில் அது சவாலாகத்தான் இருந்தது. போகப் போக பழகிவிட்டது. ரசிகர்களும் அதிகமாக ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இப்போது, ஒரு பாடலை படித்துப் பார்த்த மாத்திரத்தில், அதை மேற்கத்திய இசையிலும் இந்திய இசையிலும் சரியாக பாட முடியுமா என்று உடனே சீர்தூக்கிப்பார்த்து கூறிவிடுவேன்’’ என்கிறார்.
தனக்குப் பிடித்த பாடல்களில், ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற ‘நானே வருகிறேன்...’-ம் அடங்கும் என்று சொல்லும் வித்யாவுக்கு ஏ.ஆர். ரகுமான் இசையில் பாட ஆசையாம்.
வித்யா தனது வெற்றியில், இசையமைப்பாளர் ஷங்கர் டக்கருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்கிறார். இருவரும் இணைந்தே இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்கள்.
இன்று வித்யாவை டுவிட்டரிலும், இன்ஸ்டா கிராமிலும் லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள். ஆனால், ‘‘நான் புகழைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. மக்கள் என் இசையைக் கேட்டால் போதும் என்றுதான் எண்ணுகிறேன்’’ என்கிறார் எளிமையாக.
பாராட்டுகளைப் போல தன்னைப் பற்றி வரும் கிண்டல்களையும் வித்யா கண்டுகொள்வதில்லையாம்.
‘‘நான் ஒருமுறை கடற்கரைக்கு நீச்சலுடை அணிந்து சென்றபோது அதைப் பற்றி ஏகப்பட்ட எதிர்மறை கமெண்டுகள் வந்தன. இதையே ஓர் ஆண் செய்திருந்தால் விமர்சித்திருக்க மாட்டார்கள். நான் ஏதோ நிர்வாணமாகச் சென்றுவிட்டதைப் போல சீண்டினார்கள். அதற்கெல்லாம் நான் உடனுக்குடன் சூடாகப் பதில் கொடுத்துவிட்டேன். ஒரு பெண் தான் விரும்புவதைப் போல சுதந்திரமாக இருக்கணும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ -தெளிவாகச் சொல்லி முடிக்கிறார், வித்யா வோக்ஸ்.

Related Tags :
Next Story