திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நூதன வேண்டுதல் மனு எழுதி உண்டியலில் போட்டனர்
தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் சாமி சிலைகள் கொள்ளை, மோசடி மற்றும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் நடைபெற்று உள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருவொற்றியூர்,
இந்தநிலையில் வடசென்னை மாவட்ட இந்து முன்னணி சார்பில், கோவில் சொத்துக்களை அபகரிப்பவர் களுக்கு நீயே தண்டனை கொடு என திருவொற்றியூர் வடிவுடையம்மனுக்கு கோரிக்கை விடுத்து, கோவில் உண்டியலில் மனு எழுதிப்போட்டு நூதன வேண்டுதலில் ஈடுபட்டனர்.
இதில் மாநில செயலாளர் மனோகரன், சென்னை மாநகர செயலாளர் செல்வக்குமார் மற்றும் பெண்கள், சிறுவர்கள் என 50–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திருவொற்றியூர் வடிவுடையம்மனுக்கு கோரிக்கை விடுத்து உண்டியலில் மனுக்களை போட்டனர்.
அதில் ‘‘சுவாமி, கோவில் சொத்து எல்லாம் கொள்ளைபோகுது, கோவில் சிலை எல்லாம் திருடு போகுது, கோவில் குளம் எல்லாம் காணாமல் போகுது, காரணமானவர்களுக்கு நீயே தண்டனை கொடு, போராட எங்களுக்கு சக்தி கொடு’’ என்று எழுதப்பட்டு இருந்தது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story