நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து முதல்-மந்திரி குமாரசாமி குறைகளை கேட்டார்


நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து முதல்-மந்திரி குமாரசாமி குறைகளை கேட்டார்
x
தினத்தந்தி 20 Aug 2018 5:00 AM IST (Updated: 19 Aug 2018 11:44 PM IST)
t-max-icont-min-icon

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து முதல்-மந்திரி குமாரசாமி குறைகளை கேட்டார்.

பெங்களூரு, 

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து முதல்-மந்திரி குமாரசாமி குறைகளை கேட்டார். அப்போது குடகில் ‘மறுவாழ்வு வசதிகளை செய்ய அரசு தயாராக உள்ளது’ என பேசினார்.

வெள்ள சேதங்களை...

குடகு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மடிகேரி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களில் இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்-மந்திரி குமாரசாமி நேற்று 2-வது நாளாக முதல்-மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டரில் பறந்து வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார்.

மறுவாழ்வு வசதிகள்

அப்போது அவர் பேசுகையில், “சாய் லே-அவுட்டில் 200 வீடுகளும், குவெம்பு லே-அவுட்டில் 400 வீடுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. தயவு செய்து நீங்கள் அனைவரும் அரசின் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். குடகு மாவட்டம் மிகவும் விசித்திரமானது. குடகு தனக்கே உரிய கலாசாரம், பண்பாடுகளை கொண்டுள்ளது. ராணுவ வீரர்களை கொடுத்த மாவட்டம் குடகு. இத்தகைய மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பாதிப்புகள் உண்டாகி இருப்பது துரதிருஷ்ட வசமானது. உங்களுக்கு தேவையான மறுவாழ்வு வசதிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. அதனால் நீங்கள் ஆதங்கப்பட தேவை இல்லை“ என்றார்.

Next Story