குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் 2 மாத ஊதியத்தை வழங்க முடிவு


குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் 2 மாத ஊதியத்தை வழங்க முடிவு
x
தினத்தந்தி 20 Aug 2018 4:30 AM IST (Updated: 19 Aug 2018 11:58 PM IST)
t-max-icont-min-icon

குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்களின் 2 மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு, 

குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்களின் 2 மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்.அசோக் கூறினார்.

2 மாத ஊதியத்தை...

பெங்களூரு நகர பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் துணை முதல்–மந்திரி ஆர்.அசோக் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூருவில் உள்ள தொகுதிகளை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு ஆர்.அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜனதா எவ்வாறு நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்களின் 2 மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

ரூ.10 ஆயிரம் வழங்குவது....

மேலும் கட்சியின் இதர நிர்வாகிகள் குறைந்தது ரூ.10 ஆயிரம் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தேவையான நிவாரண பொருட்களுடன் இன்று(திங்கட்கிழமை) எனது தலைமையில் மடிக்கேரி செல்வது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. குடகு மாவட்டத்தில் மழையால் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை சரிசெய்ய உதவுவது குறித்தும் நாங்கள் ஆலோசிப்போம்.

எம்.எல்.சி.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் இன்றே ரூ.11.56 லட்சம் நிவாரண தொகையை என்னிடம் வழங்கினர். குடகு மாவட்ட எம்.எல்.ஏ.க்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அங்கு எந்த வகையான உதவிகள் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப நாங்கள் உதவி செய்வோம்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.


Next Story