கேரளாவில் வெள்ள பாதிப்பு எதிரொலி: 3¼ கோடி முட்டைகள் தேக்கம்
கேரளாவில் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பின் எதிரொலியாக நாமக்கல்லில் 3¼ கோடி முட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் 3½ கோடி முட்டைகள் கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதற்கிடையே கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்த முட்டைகளை தற்போது அங்கு பெய்து வரும் தொடர்மழை காரணமாக நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் வெள்ள பாதிப்பு காரணமாக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட முட்டைகளும் சம்பந்தப்பட்ட இடங்களில் இறக்கப்படாமல் ஆங்காங்கே லாரிகளிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் கூறியதாவது:-
கேரள மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் தொடர் மழை காரணமாக ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்பால் நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்பட வேண்டிய முட்டைகள் நாளுக்கு நாள் தேக்கம் அடைந்து வருகின்றன. நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு நாள் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்த 1 கோடி முட்டைகளில் 20 லட்சம் முட்டைகள் மட்டுமே தற்போது கொண்டு செல்லப்படுகிறது. வடக்கு கேரளாவை தவிர வேறு எங்கும் முட்டைகளை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் முட்டைகள் வீதம் கடந்த 4 நாட்களாக 3¼ கோடி முட்டைகள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படாமல் நாமக்கல் மண்டலத்தில் தேக்கம் அடைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story