காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும் மயிலாடுதுறை பகுதியில் வறண்டு கிடக்கும் குளங்கள்
காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும், மயிலாடுதுறை பகுதியில் குளங்கள் வறண்டு கிடக்கின்றன. எனவே தண்ணீர் வரக்கூடிய வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை நநகராட்சிக்கு சொந்தமாக 79 குளங்களும், தனியாருக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட குளங்களும் உள்ளன. மேட்டூர் அணையில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால் மயிலாடுதுறை நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன.
இதற்கு காரணம் நகர்பகுதியில் உள்ள குளங்களுக்கு செல்லும் வாய்க்கால்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டும், மரம், செடி-கொடிகள் வளர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் வாய்க்கால்கள் தூர்ந்துபோய் இருப்பதால் தண்ணீர் வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் அனைத்து குளங்களும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதனால் மயிலாடுதுறை நகர்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? என்று விவசாயிகளும், பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த திட்டத்தின் நோக்கமே கோடை காலத்தில் நீர்நிலைகளையும், தண்ணீர் வரும் வாய்க்கால்களையும் தூர்வாரி பராமரிப்பது தான். ஆனால் மயிலாடுதுறை நகர் பகுதியில் உள்ள நீர்நிலைகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதா? ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதா? என்றால் கேள்விக்குறியாக உள்ளது.
கடைமடை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள சூழ்நிலையில் மயிலாடுதுறையில் வெள்ளாந்தெருவில் உள்ள அம்பளாகுளம், திருவாரூர் சாலையில் உள்ள சங்கிலி குளம், பட்டமங்கல புதுத்தெரு பின்புறம் உள்ள வண்ணாங்குளம், பெசன்ட் நகரில் உள்ள அம்பட்டன் குட்டை குளம், மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள குளம் உள்பட நகர்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பெரிய குளங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடப்பது வேதனைக்கு உரியதாக உள்ளது.
நாகை மாவட்டத்தில் முக்கிய தொழிலான விவசாயத்தையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாத்திட, குடிமராமத்து திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி குளங்களையும், வாய்கால்களையும் தூர்வார வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story