இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு முதல் கட்டமாக ரூ.1 லட்சம் நிதி உதவி


இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு முதல் கட்டமாக ரூ.1 லட்சம் நிதி உதவி
x
தினத்தந்தி 20 Aug 2018 3:39 AM IST (Updated: 20 Aug 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு முதல் கட்டமாக ரூ.1லட்சம் நிதியுதவி வழங்குவது என்று சிவங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை,

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தாமஸ்அமலநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன் மொழிந்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவி, ஜெயக்குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் அமலசேவியர், மாலா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆரோக்கியராஜ், சிங்கராயர், மாவட்ட பொருளாளர் குமரேசன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் முதல்அமைச்சரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி, பாராளு மன்றம் சபாநாயகர் சோம்நாத்சட்டர்ஜி, இந்தியா முன்னாள் பாரத பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் மற்றும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கேரள மக்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இடை நிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாட்டை வரும் செப்டம்பர் மாதம் 1ந் தேதி அன்று சிவகங்கையில் சிறப்பாக நடத்துவது என்றும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு உயிர் மற்றும் உடமைகளை இழந்து வாடும் கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் முதல் கட்டமாக சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ.1லட்சம் நிவாரண நிதி வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வரும் செப்டம்பர் 8மற்றும் 9ஆம் தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெறும் பெண் ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழு தேசிய மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் கலந்து கொள்வது என்றும் மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story