விமான நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை
ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஏர்கிராப்ட் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏர் இந்திய விமான நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸஸ் லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் ஏர்கிராப்ட் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 111 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
நேர்காணலில் பங்கேற்க விரும்புபவர்கள் பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும், ஓ.பி.சி. பிரிவினர் 38 வயதிற்குள்ளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 1-9-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.
ஏ.எம்.இ. டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.
விருப்பமுள்ள பொது மற்றும் ஓ..பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.1000, கட்டணத்தை டி.டி.யாக எடுத்து தேவையான சான்றுகளுடன் நேரில் ஆஜராகலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் 4-9-2018-ந் தேதியும், ஏ.எம்.இ. படித்தவர்களுக்கு 6-9-2018-ந் தேதியும், முன்னாள் படைவீரர்கள் 10-9-2018-ந் தேதியும் நேர்காணலில் பங்கேற்கலாம். புதுடெல்லி நியூ கஸ்டம்ஸ் ஹவுசில் நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விவரங்களை http://aiesl.airindia.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story