கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8339 பணிகள்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பள்ளி அமைப்பு கேந்திரிய வித்யாலயா. இந்த அமைப்பின் கீழ் 1183 பள்ளிகள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றன. 3 பள்ளிகள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. 1962 முதல் இந்த பள்ளி கல்வி அமைப்பு செயல்பட்டு வருகிறது.
தற்போது இதன் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் பணிக்கு 76 பேர், துணை முதல்வர் பணிக்கு 220 பேர், முதுநிலை ஆசிரியர் பணிக்கு 592 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 1900 பேர், நூலகர் பணிக்கு 50 பேர், ஆரம்பநிலை ஆசிரியர் பணிக்கு 5 ஆயிரத்து 300 பேர், இசை ஆசிரியர் பணிக்கு 201 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 8 ஆயிரத்து 339 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் 24-8-2018-ந் தேதி முதல் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 13-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://kvsangathan.nic.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story