அளவுகளும், அலகுகளும்!


அளவுகளும், அலகுகளும்!
x
தினத்தந்தி 20 Aug 2018 12:48 PM IST (Updated: 20 Aug 2018 12:48 PM IST)
t-max-icont-min-icon

.

* ஒளி அலைகளின் நீளத்தை குறிக்கும் அலகு ஆங்ஸ்ட்ரம் ஆகும்.

ஒரு ஆங்ஸ்ட்ரம் என்பது 10-10 மீட்டர்.

* பாக்டீரியாக்களின் அளவை குறிக்கும் அலகு : மைக்ரான்

ஒரு மைக்ரான் = 10-6 மீட்டர்.

* கடலின் ஆழத்தின் அலகு பாதோம்.

ஒரு பாதோம் என்பது 6 அடி, 100 பாதோம் என்பது ஒரு கேபிள்.

* கப்பலின் வேகம் நாட்டிக்கல் மைல் என்ற அலகில் குறிப்பிடப்படும். ஒரு நாட்டிக்கல் மைல் என்பது 1.83 கி.மீ.

* காகிதங்களை குறிப்பிடும் அலகு குயர். 

ஒரு குயர் என்பது 24 காகிதங்கள்.  20 குயர் சேர்ந்தது (480 காகிதம்) ஒரு ரீம் எனப்படுகிறது.

* ஓர் அடி என்பது 12 அங்குலம்.

43560 அடி சதுர அடி அல்லது 100 சென்ட் சேர்ந்தது - ஒரு ஏக்கர். ஒரு ஹெக்டேர் = 2.47 ஏக்கர்

* தங்கத்தின் தூய்மையை குறிக்கும் அலகு காரட் 100 சதவீத தூய தங்கம் 24 காரட்.

22 காரட் தங்கத்தில் 91.6 சதவீதமும், 18 காரட்டில் 75 சதவீதமும் தங்கமும் உள்ளது.

* ஒரு பேரல் என்பது 31½ காலன் அல்லது 159 லிட்டரை குறிக்கும். 

ஒரு காலன் என்பது 4 லிட்டர்.

* பருத்தியின் எடை பேல்களில் குறிப்பிடப்படும். ஒரு பேல் என்பது 500 பவுண்டு.

ஒரு பவுண்டு என்பது 453 கிராம். ஒரு கிலோ = 2.2 பவுண்டு. ஒரு மெட்ரிக் டன் என்பது 1000 கிலோ.

Next Story