விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் ஆலோசனை
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆலோசனை நடத்தினர்.
பெரம்பூர்,
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மற்றும் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு முன்அனுமதி பெறுவது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிப்பது பற்றியும் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வியாசர்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் உதவி கமிஷனர்கள் அழகேசன், அரிக்குமார் முன்னிலைவகித்தனர். இக்கூட்டத்தில் புளியந்தோப்பு போலீஸ் மாவட்டதிற்குட்பட்ட செம்பியம், திரு.வி.க. நகர், பெரவள்ளுர், ஓட்டேரி, புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி. நகர் ஆகிய 9 போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் போலீசார் தவிர, மாநகராட்சி அதிகாரிகள், மின் வாரிய அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் அகில இந்திய இந்து சத்தியசேனா நிறுவன தலைவர் வசந்தகுமார் உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வீதிகளில் விநாயகர் சிலைகளை வைப்பது மற்றும் அவற்றை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அரசாணையை சுட்டிக்காட்டி அதனை முறையாக பின்பற்ற வேண்டுமென போலீசார் கேட்டுக்கொண்டனர்.
விநாயகர் சதுர்த்தியை பாதுகாப்புடன் கொண்டாடவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமலும் வீதிகளில் விநாயகர் சிலைகளை வைத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதே போல் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க லாரி, குட்டியானை உள்ளிட்ட வாகனங்களை முறையாக அனுமதி பெற்று பயன்படுத்தவேண்டும் என்றும் மாட்டு வண்டி, ரிக்ஷா உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் கட்டாயம் அவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து அமைப்பினர் தமிழக அரசின் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். குறிப்பாக மின்வாரியத்திற்கு கட்டவேண்டிய டெபாசிட் தொகையை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இதனால் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு போலீசார் தக்க விளக்கம் கொடுத்ததன் பேரில் அவர்கள் அதை ஏற்று கூட்டத்தை தொடர்ந்தனர். கூட்டத்தை தொடர்ந்து இந்து அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணை கமிஷனரிடம் கொடுத்தனர்.

Related Tags :
Next Story