ஊதிய உயர்வு வழங்கக்கோரி மன்னார்குடியில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
ஊதிய உயர்வு வழங்கக்கோரி மன்னார்குடியில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுந்தரக்கோட்டை,
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மணவழகன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதேபோல் ஊதிய உயர்வு வழங்கக்கோரி மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் உள்ளிக்கோட்டை, தலையாமங்கலம், சாத்தனூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
வருகிற 24-ந் தேதி திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக சென்று திருவாரூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை குறித்து மனு அளிக்க இருப்பதாக அரசு டாக்டர்கள் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story