பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: நெல்லை கோர்ட்டில் 11 பேர் ஆஜர்


பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: நெல்லை கோர்ட்டில் 11 பேர் ஆஜர்
x
தினத்தந்தி 21 Aug 2018 3:15 AM IST (Updated: 21 Aug 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் ஓடும் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 11 பேர் நெல்லை கோர்ட்டில் ஆஜராகினர்.

நெல்லை,

பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் ஓடும் பஸ்சில் கடந்த 2012-ம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் கிச்சான்புகாரி, பறவை பாதுஷா, செய்யது அலி உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கிச்சான்புகாரி உள்பட 3 பேர் பெங்களூர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட 3-வது கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி ஜெயபால் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 

கிச்சான்புகாரி உள்பட 3 பேரை பெங்களூரில் இருந்து வேன் மூலம் போலீசார் அழைத்து வந்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மற்றவர்களும் கோர்ட்டில் ஆஜராகினர். இந்த வழக்கில் 11 பேர் ஆஜரானார்கள். இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ந் தேதிக்கு நீதிபதி ஜெயபால் ஒத்திவைத்தார். இதையடுத்து கிச்சான்புகாரி உள்பட 3 பேரையும் போலீசார் பெங்களூர் கொண்டு சென்றனர். 

Next Story