குடகு மக்களுக்கு உதவ விரும்புவோர் முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பலாம்


குடகு மக்களுக்கு உதவ விரும்புவோர் முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பலாம்
x
தினத்தந்தி 21 Aug 2018 4:08 AM IST (Updated: 21 Aug 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளம் பாதித்த குடகு மக்களுக்கு உதவ விரும்புவோர் முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பலாம் என்று மக்களுக்கு மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெங்களுரு,

குடகு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக மடிகேரி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை இயற்கை பேரிடர் மீட்பு குழு மற்றும் ராணுவ வீரர்கள் மீட்டனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவுகள் மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. குடகில் தற்போது மழை லேசாக விட்டுள்ளது.

குடகு மாவட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு கர்நாடகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்ட மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை பணமாகவோ அல்லது அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களாகவோ வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் பணத்தை செலுத்தலாம் என்று மக்களுக்கு மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வங்கி எண் விவரங்கள்

Account Name: chief minister relief fund natural calamity 2018

Account Number: 37887098605

IFSC NO: SBIN0040277

Bank Branch: State bank of India. Vidhana soud-ha

இந்த வங்கி எண்ணில் நன்கொடையாக செலுத்தப்படும் பணத்திற்கு வருமான வரி சட்டம் 80 ஜி பிரிவின் கீழ் 100 சதவீத வருமான வரி விலக்கு பெற முடியும்.

Next Story