கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
கீழணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1.65 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெள்ளம் வடியாததால் கொள் ளிடம் ஆற்றின் கரை யோர கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. முதலைகள் நடமாட்டத்தாலும் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
சிதம்பரம்,
கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் அணை கள் நிரம்பி, உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப் பட்டது. அதிகப்படியான தண்ணீர் வந்ததால் இந்த ஆண்டு 2 முறை மேட்டூர் அணை நிரம்பியது. அங்கி ருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தஞ்சாவூர் மாவட் டம் அணைக்கரையில் உள்ள கீழணைக்கு வந்தது. இங் கிருந்து கடந்த மாதம் 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கும், உபரிநீர் கொள்ளிடம் ஆற்றுக்கும் திறந்து விடப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொடியம் பாளை யம் என்ற இடத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. கொடியம்பாளையத்தில் முகத்துவாரம் தூர்வாரப் படாததாலும், வங்கக்கடல் காவிரி நீரை உள்வாங்காத தாலும் அருகில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் தண் ணீர் உட்புகுந்தது. இதனால் கடந்த 14-ந் தேதி முதல் கொள்ளிடம் ஆற்றுக்கும், பழைய கொள்ளிடம் ஆற்றுக்கும் இடையே உள்ள கீழகுண்டலபாடி, திட்டு காட்டூர், அக்கரை ஜெயங் கொண்டபட்டினம் ஆகிய கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து தீவுபோல் காட்சி அளிக்கிறது. வாகன போக்குவரத்து துண்டிக்கப் பட்ட நிலையில் படகு மூலம் 3 கிராம மக்களும் பெராம் பட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கிழணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் கனஅடிநீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடத்தின் இருகரை களையும் வெள்ளம் தொட்ட படி சென்றது. சில இடங்களில் இருபுற கரைகள் தெரியாத அளவுக்கு வெள்ளம் வழிந்து செல்கிறது. அகரநல்லூரில் பழைய கொள்ளிடக்கரையில் உடைப்பு ஏற்பட்டதால் 24 கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் சிக்கிய 3,600 பேர் கீழகுண்டலபாடி புயல் பாதுகாப்பு மையத்திலும், மடத்தான்தோப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதி களில் உள்ள விவசாய நிலங்க ளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதனால் நெல், கரும்பு, வாழை, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள் ளன. கீழணையில் இருந்து நேற்று கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடி நீர் உபரிநீராக திறக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அகரநல்லூர், வேளக்குடி, பழையநல்லூர், கண்டியா மேடு, சாலியந்தோப்பு, வை யூர், காட்டுகூடலூர், பூலா மேடு, மண்டபம், தீர்த்தகுடி, எருக்கன்காட்டுபடுகை, சின்னகாரைமேடு, இளந்திரை மேடு, வீரன்கோவில் திட்டு, படுகை, அம்பிகாபுரம், மடத் தான்தோப்பு, பெராம்பட்டு, வெங்காயமேடு, நடுத்திட்டு, காட்டூர், திட்டுகாட்டூர், கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம் ஆகிய கிராமங்களில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை. இதனால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் சாலையோர மரத்தடியிலும் வீட்டு மாடியிலும் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பழைய கொள்ளிடக்கரையோரத்தில் உள்ள இளநாங்கூர் என்ற கிராமத்துக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கிராம மக்கள் இரவோடு இரவாக வீட்டைவிட்டு வெளியேறி மேடான பகுதிக்கு சென்றனர். மேலும் அப் பகுதியில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய் திருந்த நெற்பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கின.
இதற்கிடையில் பழைய கொள்ளிடம் ஆற்றில் இருந்த 500-க்கும் மேற்பட்ட முதலைகள் மாயமாகி உள்ளது. அவை ஆங்காங்கே தண்ணீரில் செல்வதை கிராம மக்கள் பார்த்துள்ளனர். அவை கடித்துவிடுமோ என்று பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நேற்று காலையில் இளநாங்கூரில் 6 முதலைகள் சுற்றித்திரிவதாகவும், அதை பார்த்ததாகவும் அந்த கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி கடலூர் மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், சிதம்பரம் வனச்சரக அலுவலர் அப்துல்ஹமீது மற்றும் வனத்துறையினர் வாகனத்துடன் விரைந்து அந்த கிராமத்துக்கு சென்றனர். முதலை களை பார்த்ததாக கூறியவர் களிடம் விசாரித்தனர். பின்னர் வன அலுவலர் ராஜேந்திரன், வாகனத்துடன் கிராமத்தி லேயே முகாமிட்டு, முதலை களை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டனர். இருப்பினும் அந்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story