இளம்பெண்ணிடம் பணம் பறித்த என்ஜினீயர் கைது


இளம்பெண்ணிடம் பணம் பறித்த என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2018 4:58 AM IST (Updated: 21 Aug 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

மாடலிங் வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணிடம் பணம் பறித்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

தென் மும்பையை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணிற்கு கடந்த ஆண்டு வில்லேபார்லே பகுதியில் வசித்து வரும் சிந்தன் (வயது26) என்ற என்ஜினீயர் சமூகவலைதளம் மூலம் அறிமுகம் ஆனார். இளம்பெண்ணிற்கு மாடல் அழகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதை தெரிந்து கொண்ட என்ஜினீயர் இளம்பெண்ணிற்கு மாடலிங் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

அவர் இளம்பெண்ணிடம் மாடலிங் வாய்ப்பிற்கு ரூ.40 ஆயிரமும், ஆபாச படத்தையும் அனுப்புமாறு கூறி னார். என்ஜினீயரை நம்பிய இளம்பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினார். மேலும் மாடலிங் வாய்ப்பிற்காக ஆபாச படத்தையும் என்ஜினீயருக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் சொன்னது போல வாலிபர் சிந்தன், இளம்பெண்ணிற்கு மாடலிங் வாய்ப்பு வாங்கி கொடுக்கவில்லை. இந்தநிலையில் அவர் இளம்பெண்ணிடம் மேலும் பணம் கேட்டார். பணத்தை கொடுக்கவில்லையென்றால் ஆபாச படத்தை பரப்பிவிடுவேன் என இளம்பெண்ணை மிரட்டினார்.

இதுகுறித்து இளம்பெண் டோங்கிரி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் சிந்தனை கைது செய்தனர்.

Next Story