மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் புதுவை மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து துரோகம் இழைக்கிறது - அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவை அரசு மாணவர் களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கிறது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவை அரசு தொடர்ந்து மாணவர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. புதுவையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,050 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்களை, அதாவது 525 இடங்களை புதுவை அரசுக்கு பெறவேண்டும்.
ஆனால் அதற்குரிய சட்டம் இதுவரை இயற்றப்படாததால் அந்த இடங்களை பெறமுடியவில்லை. தொடர்ந்து வரும் அரசுகள் தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. இதில் மிகப் பெரிய முறைகேடு நடந்து வருகிறது.
கடந்த காலங்களில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 140 இடங்களை பெற்றோம். ஆனால் நீட் தேர்வு வந்தபின் அந்த இடங்கள் கிடைக்கவில்லை. முந்தைய நிலையை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் எடுத்துக்கூறி உரிய இடங்களை பெறவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 2 கட்ட கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் தற்போது 250 இடங்கள் காலியாக உள்ளது. அந்த இடங்களை அகில இந்திய நீட் தரவரிசை அடிப்படையில் ஒட்டுமொத்த கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளனர். இதனால் புதுவை மாணவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இந்த விஷயத்தில் சென்டாக் ஒரு புரோக்கராகவே செயல் படுகிறது.
அதிகாரம் இல்லாமலேயே நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடங்களைபெறும் வகையில் சட்டம் இயற்ற தயங்குகிறார்கள். கவர்னரும் இந்த பிரச்சினையில் தனது அதிகாரத்தை செலுத்தவில்லை. இந்த சட்டத்தை நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Related Tags :
Next Story