உப்பு இலாகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை
தூத்துக்குடியில் உப்பு இலாகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பவர்களுக்குஇலவச பட்டா வழங்க வேண்டும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் உப்பு இலாகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பவர்களுக்குஇலவச பட்டா வழங்க வேண்டும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரிக்கு அனுப்பிய மனுவில் கூறி இருப்பதாவது;–
பட்டாதூத்துக்குடி மாநகராட்சியில் மத்திய அரசின் உப்பு இலாகாவிற்கு உட்பட்ட ஊரணி ஒத்தவீடு, மினி சகாயபுரம் ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகிறார்கள். அந்தப் பகுதியில் மாநகராட்சி மூலம் குடிநீர் வசதியோ, தெருவிளக்கோ, சாலை வசதியோ கழிப்பிட வசதியோ செய்ய முடியாத நிலையில் அங்குள்ள மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். நான் மத்திய உப்பு இலாகா அதிகாரியிடம் நேரில் சந்தித்து மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்த போது, மாநில அரசுக்கு இடத்தை விலைக்கு வழங்க முடியும் என்பதை கூறினார். ஆகவே மாவட்ட கலெக்டர் இந்த கோரிக்கை மீது கவனம் செலுத்தி அரசின் மூலம் அந்த இடத்தைப் பெற்று, அதில் குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச குடியிருப்பு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேஷன்கடைஅதே போல் வீரநாயக்கன்தட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முத்தையாபுரத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த பகுதியில் 150 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். ஆகவே மாவட்ட கலெக்டர் அந்தப் பகுதியில் நகரும் கூட்டுறவு கடை மூலமோ அல்லது வாரம் 2 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் அந்தப் பகுதிக்கு சென்று வினியோகம் செய்யவோ ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் மணிநகர், அண்ணாநகர்–1, டூவிபுரம் பகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடை, போல்பேட்டை பகுதி மார்க்கெட்டிங் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ளதால் மக்கள் அதிக தூரம் சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே போல்பேட்டை மார்க்கெட்டிங் சொசைட்டியில் உள்ள கடையை டூவிபுரத்தில் உள்ள மகளிர்குழு வணிக வளாகத்தில் காலியாக உள்ள கடைகளில் மாற்றி அமைத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும்.
இவ்வாறு அவர் அனுப்பிய மனுவில் கூறி இருந்தார்.