வருகிற 24–ந் தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 24–ந் தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 24–ந் தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது;–
அம்மா திட்ட முகாம்தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 24–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தாலுகாவில் பேரூரணி கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவில் மூலக்கரை கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் விட்டிலாபுரம், கோவில்பத்து கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகாவில் மீரான்குளம் பகுதி–2 கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் ஜமீன்தேவர்குளம் கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகாவில் சின்னூர், மாவிலோடை கிராமங்களிலும், எட்டயபுரம் தாலுகாவில் ஈராச்சி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கீழமுடிமண் கிராமத்திலும், கயத்தாறு தாலுகாவில் தொட்டன்பட்டி கிராமத்திலும், ஏரல் தாலுகாவில் இருவப்பபுரம் பகுதி–1 கிராமத்திலும் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளது.
கோரிக்கைஇந்த முகாமில் மக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு– இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.