நெல்லை– தென்காசியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை


நெல்லை– தென்காசியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 22 Aug 2018 2:45 AM IST (Updated: 21 Aug 2018 8:09 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மற்றும் தென்காசியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

நெல்லை, 

நெல்லை மற்றும் தென்காசியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

மேலப்பாளையம்

பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் மஸ்திக் தக்வா ஜமாத், ஹிஜிரி கமிட்டி ஆப் இந்தியா சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. மவுலவி முகமது உசேன் தலைமை தாங்கி தொழுகையை நடத்தினார். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

மேலப்பாளையம் அமுதா பீட்நகரில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. ஜாக்கமிட்டி மாநில பொதுச்செயலாளர் நூர் முகமது தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜபருல் இஸ்லாம், முகைதீன், மேதா மைதீன், ஜாக் கமிட்டி கிளை தலைவர் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி

தென்காசி மதினா நகர் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் த.மு.மு.க சார்பில் தென்காசி முஸ்தபியா நடுநிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று காலை 7 மணிக்கு பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகைக்கு பிறகு பள்ளிவாசலில் மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு ஏழைகள் மற்றும் அனைத்து சமுதாய மக்களுக்கு இறைச்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் தலைவரும் த.மு.மு.க மாநில செயலாளருமான மைதீன் சேட்கான் தலைமை தாங்கினார். த.மு.மு.க நகர தலைவர் அகமது ஷா வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் அபுபக்கர் சித்திக் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் நயினார் முகம்மது கேரள மக்களுக்காக நிதி வழங்கக்கோரி பேசினார். தொழுகையில் ஜமாத் செயலாளர் நாகூர் மீரான், துணை செயலாளர்கள் ரஹ்மத்துல்லா, ஹாருன் ரஷித், இப்ராகிம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சலிம், மாவட்ட துணை செயலாளர்கள் கோக்கர்ஜான் ஜமால், கோகோ அலி உள்பட ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.


Next Story