நீலமங்கலம் கிராமத்தில் ரூ.10 லட்சம் செலவில் டிரான்ஸ்பார்மர்கள்


நீலமங்கலம் கிராமத்தில் ரூ.10 லட்சம் செலவில் டிரான்ஸ்பார்மர்கள்
x
தினத்தந்தி 22 Aug 2018 3:00 AM IST (Updated: 22 Aug 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த மின்அழுத்த பிரச்சினை இருந்து வந்ததால் அந்த பகுதி மக்கள் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கற்பகம் சுந்தரிடம் கோரிக்கை விடுத்தனர்.

வண்டலூர்,

கூடுவாஞ்சேரியை அடுத்த ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் உள்ள காமராஜர் நகர், ஜீவா நகர் போன்ற பகுதிகளில் குறைந்த மின்அழுத்த பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கற்பகம் சுந்தரிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அவர் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மின்வாரிய அதிகாரிகள் காமராஜர் நகர், ஜீவா நகர் ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக 2 டிரான்ஸ்பார்மர்களை அமைத்தனர்.

இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கற்பகம் சுந்தர் தலைமை தாங்கினார். படப்பை-மணிமங்கலம் வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் என்.டி.சுந்தர், உதவி செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மறைமலைநகர் செயற்பொறியாளர் தேசாபிமானன் கலந்துகொண்டு புதிய டிரான்ஸ்பார்மரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் ஒரத்தூர் வனக்குழு தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ், மின்வாரிய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story