கபிஸ்தலம் அருகே வயலில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்தது 14 மாணவ-மாணவிகள் காயம்


கபிஸ்தலம் அருகே வயலில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்தது 14 மாணவ-மாணவிகள் காயம்
x
தினத்தந்தி 21 Aug 2018 10:45 PM GMT (Updated: 21 Aug 2018 7:51 PM GMT)

கபிஸ்தலம் அருகே தனியார் பள்ளி வேன், வயலில் கவிழ்ந்தது. இதில் 14 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே பாபநாசத்தில் ஒரு தனியார் கல்லூரி மற்றும் பள்ளி ஆகியவை ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த பள்ளி மாணவர்களை அழைத்து வர பள்ளி நிர்வாகம் சார்பில் வேன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை பட்டவர்த்தி கிராமத்தில் இருந்து மாணவ-மாணவிகள் 14 பேரை ஏற்றி கொண்டு வேன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை அருகே வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழுந்து தாறுமாறாக ஓடிய வேன் அந்த பகுதியில் இருந்த ஒரு வயலில் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த மாணவ-மாணவிகள் சத்தம் போட்டனர். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து வேனில் இருந்த மாணவ-மாணவிகளை மீட்டனர்.

14 மாணவ-மாணவிகள் காயம்

இந்த விபத்தில் மாணவ-மாணவிகள் 14 பேரும் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 

Next Story