லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் உள்பட 3 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர்,
சென்னை அண்ணாநகர் 7-வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் நாகராஜன். இவர் தனது புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு சொத்துவரி செலுத்துவதற்காக அம்பத்தூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவர் சொத்து வரி செலுத்துவதற்காக அதிகாரிகளை நாடியபோது அங்கிருந்த வருவாய் உதவியாளர் வெங்கடேஷ் (வயது 44) சொத்துவரி செலுத்துவதற்கு தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டதாக தெரிகிறது.
அவருக்கு உடந்தையாக அதே அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் வீரபாகு (42) மற்றும் பிரபாகர் (30) ஆகியோர் இருந்துள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன் இதுகுறித்து சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
அவர்களின் அறிவுரையின்படி 5-3-2010 அன்று ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு சென்ற அவர் அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்த வருவாய் உதவியாளர் வெங்கடேசிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெங்கடேசை கைது செய்தனர். அவருடன் இருந்த இளநிலை உதவியாளர் வீரபாகு, பிரபாகர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதித்துறை சிறப்பு நீதிபதி டி.வி.மணி வழக்கை விசாரித்து, வருவாய் உதவியாளர் வெங்கடேஷ், இளநிலை உதவியாளர் வீரபாகு ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.14 ஆயிரம் அபராதமும் விதித்தார். பிரபாகருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுதரப்பு வக்கீலாக அமுதா வாதாடினார்.

Related Tags :
Next Story