வட்டார அளவிலான விளையாட்டு போட்டி: தேவகோட்டை பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்


வட்டார அளவிலான விளையாட்டு போட்டி: தேவகோட்டை பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்
x
தினத்தந்தி 21 Aug 2018 9:45 PM GMT (Updated: 21 Aug 2018 8:17 PM GMT)

வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் தேவகோட்டை தே பிரித்தோ பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

தேவகோட்டை,

தேவகோட்டை வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள், சருகணி புனித பவுல் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூட்டு விளையாட்டு போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் கால்பந்து, கூடைப்பந்து, கோ-கோ போட்டிகளிலும், சீனியர் பிரிவில் கைப்பந்து, கபடி, மேஜை பந்து உள்ளிட்ட போட்டிகளிலும் வென்று குழு விளையாட்டு போட்டிகளில் சிறந்த பள்ளிக்கான கேடயத்தை பெற்றனர்.

சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் பிரபாகர், உடற்கல்வி ஆசிரியர்கள் கிறிஸ்டோபர், சிவா, அருளானந்து ஆகியோரையும் பள்ளியின் அதிபர் ஜோசப் கென்னடி, தாளாளர் லூர்துசாமி, தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி ஆகியோர் பாராட்டினர்.

இதேபோன்று புளியால் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சாருமதி சீனியர் கோலூன்றி தாண்டுதல்(போல்வால்ட்) போட்டியில் 2-ம் இடத்தை பிடித்து, மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் சீனியர் மாணவர்களுக்கான கோலூன்றி தாண்டுதல் போட்டியில் காளஸ்வரன் 3-ம் இடம் பெற்றுள்ளார். குழு போட்டியில் சீனியர் மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் இப்பள்ளி மாணவிகள் 2-ம் இடமும், சீனியர் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் 2-ம் இடமும், ஜூனியர் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் 2-ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர் ஜோசப் இருதயராஜையும், தலைமை ஆசிரியை தனலட்சுமி பாராட்டினார்.

Next Story