உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பரிசுகள் கலெக்டர் வழங்கினார்
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், பொது சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றிய வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு கலெக்டர் பதக்கங்களை வழங்கி, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குனர் (மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம்) டாக்டர் சசிகலா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஹேமசந்த்காந்தி, உதவி திட்ட மேலாளர் டாக்டர் மறைத்தென்றல், புள்ளியியல் உதவியாளர் கோடீஸ்வரன், உதவி பேராசிரியர் கருணாகரன், பெரம்பலூர் மாவட்ட குடும்ப நல செயலகம் மற்றும் குடும்பநல நலத்துறை சார்ந்த பணியாளர்கள் கலந்துகொண்டனர்.