காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் வெள்ளம் வடிந்தது - இயல்பு வாழ்க்கை திரும்புகிறது
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் வெள்ளம் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்புகிறது.
ஈரோடு,
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஈரோடு மாவட்டத்தில் பவானி, கருங்கல்பாளையம், கொடுமுடி பகுதிகள் பாதிக்கப்பட்டன. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வெள்ளம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் சுமார் 40 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. கருங்கல்பாளையத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் இருந்த கோவில் முகப்புவரை மூழ்கியது. பழைய பாலத்தின் தூண்கள் உயரத்துக்கு சென்ற வெள்ளம் பாலத்தை தொட்டுக்கொண்டு சென்றது. இதனால் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் காவிரிக்கரை பகுதிகள் அபாய கட்டத்திலேயே இருந்தன. ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவின் பேரில் அனைத்து துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் முதல் கட்டமாக பவானிசாகர் அணையில் இருந்து ஆற்றுக்கு திறக்கும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. இதுபோல் மேட்டூர் அணையில் இருந்தும் கணிசமாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் வேகம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. கருங்கல்பாளையத்தில் குடியிருப்பு களையும், கோவிலையும் சூழ்ந்திருந்த வெள்ளம் வடிந்தது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. நேற்று காலையிலேயே காவிரி ஆற்றையொட்டிய ரோடு பகுதியில் இருந்து தண்ணீர் வடிந்து சாதாரணமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் தொடங்கியது. காவிரிக்கரையில் உள்ள கோவிலில் இருந்தும் தண்ணீர் முற்றிலும் வடிந்தது. ஒரு சில வீடுகளில் மட்டும் வெள்ளம் புகுந்ததால் சேதம் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு ஓட்டு வீட்டின் கூரைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இருந்தன. வெள்ளம் வடிந்த வீடுகளுக்குள் சென்ற உரிமையாளர்கள் வீடுகளை சுத்தம் செய்யத்தொடங்கினார்கள்.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கூறும்போது, ‘தற்போது தண்ணீர் வடிந்திருக்கிறது. ஆனால் இன்னும் சிறிதளவு தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டாலும் மீண்டும் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது. கருங்கல்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் மட்டத்துக்கு ரோடு இருப்பதால் வெள்ளம் வரும்போது குடியிருப்பு பகுதி துண்டிக்கப்படுகிறது. எனவே இங்கு கரையை உயர்த்தி கட்டி படித்துறை அமைத்தால் வெள்ள அபாயத்தில் மக்கள் சிக்காத நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு படித்துறை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதுபோல் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 486 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. எனவே நீர்மட்டம் குறையவாய்ப்பு இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். தண்ணீர் குறைந்து வருவதால் கடந்த ஒரு வாரகாலமாக தண்ணீருக்குள் மூழ்கி கிடந்த மரங்கள், பாறைகள் வெளியே தெரிய தொடங்கி உள்ளன.

Related Tags :
Next Story