ஐரோலி, முல்லுண்டு சுங்கச்சாவடியில் இலகு ரக வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்துவதில் தற்காலிக விலக்கு


ஐரோலி, முல்லுண்டு சுங்கச்சாவடியில் இலகு ரக வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்துவதில் தற்காலிக விலக்கு
x
தினத்தந்தி 22 Aug 2018 12:28 AM GMT (Updated: 22 Aug 2018 12:28 AM GMT)

ஐரோலி, முல்லுண்டு சுங்கச்சாவடியில் இலகு ரக வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்துவதில் தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்.

மும்பை,

தானே மாவட்டம், மும்ரா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகள் கடந்த மே மாதம் முதல் நடந்து வருகிறது. சீரமைப்பு பணி காரணமாக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக முல்லுண்டு மற்றும் ஐரோலி சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து செல்கின்றன.

இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி மிரட்டல் விடுத்தது.

இந்தநிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முல்லுண்டு மற்றும் ஐரோலி சுங்கச்சாவடியில் இலகு ரக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மாநில பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார். இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் இலகு ரக வாகன ஓட்டிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ந் தேதி வரை முல்லுண்டு, ஐரோலி சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த வேண்டாம். 

Next Story