டிஜிட்டல் பணியாளர்கள்
நம் குரலின் கட்டளைக்கேற்ப செயல்படும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன.
கூகுள் நிறுவனமும் அமேசான் நிறுவனமும் போட்டி போட்டுக்கொண்டு அடுத்தடுத்த வெர்சன்களை வெளியிட்டு வருகின்றன.
கூகுள் ‘ஹோம் மினி’ மற்றும் ‘அமேசான் எக்கோ டாட்’ ஆகியவை அதனுடைய முந்தைய வெர்சன்களின் மினியேச்சர்கள் தான். அடிப்படையில் இவை இரண்டுமே நம் கட்டளை கேட்டு பதில் சொல்லும் டிஜிட்டல் பணியாளர்கள்.
அமேசான் எக்கோவை செல்லமாக ‘அலெக்சா’ என்றும் கூகுள் ஹோமை ‘ஓகே கூகுள்’ என்று தோழமையுடனும் அழைக்கலாம்.
‘அலெக்சா ஹாப்பி பர்த்டே பாடு’
‘அலெக்சா காலா படம் ரிலீஸ் தேதி என்ன?’
‘அலெக்சா 5 மணிக்கு அலாரம் வை’
‘ஓகே கூகுள் பாகுபலி படத்திலிருந்து பாட்டு போடு’
‘ஓகே கூகுள் பீனிக்ஸ் மால் போக எவ்ளோ நேரம் ஆகும்?’
‘ஓகே கூகுள் மைகேல் ஜாக்சன் பத்தி சொல்லு’ என்பன போன்ற கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்டால் அழகான பெண் குரலில் பதில் வருகிறது.
** கூகுள் ஹோமின் வடிவம் எக்கோவை விட பார்ப்பதற்கு அழகாக உருண்டையாக உள்ளது.
** ஆடியோ தரமும் கூகுள் ஹோமில் தான் அருமையாக உள்ளது.
** நாம் போக வேண்டிய இடத்திற்கான சரியான தொலைவையும் அங்கே போகும் வழியில் போக்குவரத்து எப்படி உள்ளது என்பதையும் ஜி.பி.எஸ். மூலம் வழியையும் நமது மொபைல் போனுடன் இணைக்கிறது கூகுள் ஹோம்.
** கிரிக்கெட் ஸ்கோர்களை துல்லியமாக சொல்கிறது எக்கோ டாட்.
** எக்கோவில் 7 மைக்ரோபோன்களும், கூகுள் ஹோமில் 2 மைக்ரோபோன்களும் உள்ளன.
** எக்கோ டாட் விலை 4099 ரூபாய்
** கூகுள் ஹோம் மினியின் விலை 4499 ரூபாய்
Related Tags :
Next Story