875 ரூபாய்க்கு செல்போன்
செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோக்ஸ் ( Ziox ) இரண்டு மாடல் செல்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோக்ஸ் எக்ஸ் 7 மற்றும் எக்ஸ் 3 ஆகிய இரு மாடல்களில் இவை விற்பனைக்கு வந்துள்ளன. இந்த இரு மாடல்களும் ஆன்லைன் மூலம் விற்கப்படுகின்றன.
இதில் எக்ஸ் 7 மாடல் விலை ரூ.899 மற்றும் எக்ஸ் 3 மாடல் விலை ரூ.875 ஆகும். இவை இரண்டிலுமே இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் வசதி உள்ளது. இதில் எக்ஸ் 7 மாடலில் 1000 mAh பேட்டரியும் எக்ஸ் 3 மாடலில் 800 mAh பேட்டரியும் உள்ளது.
இரண்டு போன்களிலுமே தானியங்கி முறையில் அழைப்புகளை பதிவு செய்யும் வசதியும் உள்ளது. மேலும் புளூ டூத் வசதி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். வசதிகளும் உள்ளது.
வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, டார்ச், மொபைல் டிராக்கர் மற்றும் சில விளையாட்டுகள் இதில் உள்ளன. குறைந்த விலையில் அதிக பலன்களைக் கொண்ட போனாக இது சந்தைக்கு வந்துள்ளது.
Related Tags :
Next Story